×

கஞ்சா விற்றவர் சிறையிலடைப்பு

திருச்சி, மார்ச் 6: ஜாமீனில் வந்து மணிகண்டம் பகுதியில் விதிமுறைகளை மீறி கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி அடுத்த மணிகண்டம் தெற்கு பாகனூர் ரோட்டில் உள்ள கண்தீனதயாளன் நகரைச் சேர்ந்தவர் அந்துவான் மகன் ஜெரால்டு(26). இவர் ஆலம்பட்டி ரோடு பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்தார். இது தொடர்பாக மணிகண்டம் போலீசாரால் வழக்குகள் பதியப்படடு நிலுவையில் உள்ளது. கடந்த வருடம் அக்டோபர் மாதம் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் வெளிவந்தார். இதன் விதிமுறைகளை மீறி ஜெரால்டு, மீண்டும் கடந்த மாதம் 22ம் தேதி ஆலம்பட்டி பிரிவு ரோடு அருகே ரூபன்(எ)அப்பு மற்றும் நைனா முகம்மதுவுடன் வாகனத்தில் மஞ்சள் பையில் கஞ்சா வைத்து விற்பனை செய்தார். இவர்களை போலீசார் சுற்றி வளதை–்து பிடித்தனர். இதில் நைனாமுகம்மது தப்பித்து ஓடிவிட்டார். ஜெரால்டு, அப்புவை கைது செய்து அவர்களிடமிருந்து 1 கிலோ கஞ்சா மற்றும் 10 கிராம் கொண்ட 15 கஞ்சா பொட்டலங்கள், விற்ற பணம் 300யும் போலீசார் கைப்பற்றினர்.

ஜெரால்டு கடந்த 18.10.2019ம் தேதி ரங்கம் சப்.கலெக்டரிடம் ஒரு வருடம் நன்னடத்தையில் இருப்பதாக எழுதி கொடுத்து பிணையில் சென்று, பிணையை மீறி தொடர்ந்து கஞ்சா விற்பனை செய்த குற்றம் புரிந்ததால், கடந்த 3ம் தேதி ரங்கம் சப்.கலெக்டர் முன் ஆஜர்படுத்தினர். அதில் ெஜரால்டுக்கு ஒரு வருடம் சிறை தண்டனை வழங்கி, நன்னடத்தை இருந்த காலம் போக மீதி நாட்களான 17.10.2020 வரை சிறையிலடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சா வியாபாரி ஜெரால்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags :
× RELATED மாநகராட்சி நிர்வாகம் முடிவு வீடு,...